ஒன்றிய அரசே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து..! - கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆறுமுகம் மற்றும் கோவை மாவட்ட செயலாளர் சிவசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்ஒன்றிய அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மத்திய அரசுக்கு எதிராக, மாநிலம் தழுவிய போராட்டத்தில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன்படி, கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆறுமுகம் மற்றும் கோவை மாவட்ட செயலாளர் சிவசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.



கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், உத்தேச மின் கட்டண உயர்வை அமல்படுத்த மாநில அரசை நிர்பந்திக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து கோஷங்களை எழுப்பினர்.



அதேபோல, உள்ளாட்சி அமைப்புகளின் வீட்டு வரி மற்றும் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.



போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.



இதன் காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...