ஒரு மணி நேர மழைக்கே தத்தளிக்கும் கோவை...! தீர்வு தான் என்ன..?

சுமார் 1 மணி நேரம் பெய்த பலத்த மழையின் காரணமாக உப்பிலிபாளையம், லங்கா கார்னர் மேம்பாலத்திற்கு அடியில் நீர் சூழ்ந்ததால் பொது மக்கள், பள்ளி மாணவ மாணவிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதி.


கோவை: இன்று மதியம் கோவையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால், ஆங்காங்கே மழை நீர் தேங்கியதால்,பள்ளி மாணவ மாணவிகள் மற்றும்வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.



அரை நேர மழைக்கே ஊரே தத்தளிக்கும் படி மாறியதால், வேலை முடிந்து வீடு திரும்பும் வாகன ஓட்டிகள் நீண்ட நெடிய வரிசைகளில் முக்கிய சாலைகளில் காத்திருக்கும் கட்சிகளை காண முடிந்தது.



கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், கோவையில் பல்வேறு பகுதியில் பரவலாக இன்று மதியம் மற்றும் மாலையில் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக காந்திபுரம் ரயில் நிலையம், லட்சுமி மில், மருதமலை, இடையர்பாளையம், வேலாண்டிபாளையம், கவுண்டம்பாளையம், பீளமேடு, ராமநாதபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

இதனால், தாழ்வான சாலைபகுதிகளில்தண்ணீர் தேங்கியுள்ளதால் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.



குறிப்பாக,உப்பிலிபாளையம் மேம்பாலம் மற்றும் லங்கா கார்னர் மேம்பாலத்தின் அடியில் மழை நீர் தேங்கியதால் பேருந்தில் வந்த பயணிகள் சிலர் இறங்கி தேங்கி நின்ற தண்ணீரில் சிரமப்பட்டு கடந்து வந்தனர். மேலும், சில வாகனங்கள் பழுதாகி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.



ஒவ்வொரு மழைக்கு பிறகு கோவை மாநகரின் முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்குவதால், கடும் போக்குவரத்து நெரிசலால்மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நடமாட முடியாத நிலை என்பது தொடர் கதையாகி வருவதால், இது குறித்து மாவாட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து பேசி போர்க்கால அடிப்படையில் நிரந்தர தீர்வுக்கு வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ஒவ்வொரு வாகனமும் அடி மேல் அடி வைத்து நகர்ந்து செல்ல வேண்டிய சூழல் உள்ள நிலையில், இந்த நெரிசலில் எவ்வாறு ஆம்புலன்ஸ் மற்றும் நோய்வாய் பட்ட மக்கள் மருத்துவமனைக்கு போய் சேர முடியும் என்ற கேள்வியை முன்வைக்கின்றனர் கோவை மக்கள்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...