கோவையில் இரத்த வெள்ளத்தில் பட்டதாரி இளைஞர் சடலமாக மீட்பு - தாய் உட்பட 5 பேரிடம் போத்தனூர் போலீசார் விசாரணை….!

கோவை மாச்சம்பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (29) என்ற பொறியியல் பட்டதாரி, கத்தியால் குத்திய காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். தாய் உட்பட 5 பேரிடம் போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: கோவை மாச்சம்பாளையம் பகுதியில் கத்தியால் குத்திய காயங்களுடன் இளைஞர் சடலமாக மீட்ட நிலையில்தாய் உட்பட 5 பேரிடம் போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (29). பொறியியல் பட்டதாரி. போதைக்கு அடிமையான இவர் பணிக்கு செல்லாமல் கடந்த 5 ஆண்டுகளாக சுற்றி வந்ததாக தெரிகிறது. தாய்மாமன் வீட்டில் தங்கியிருந்த செந்தில்குமார், அடிக்கடி தனது தாய் பாப்பாத்தியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், இன்று மதியம் செந்தில்குமார் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. அப்போது அங்கிருந்தவர்கள் சென்று பார்த்த போது, கழுத்து மற்றும் உடலில் பல்வேறு பகுதிகளில் வெட்டுக் காயத்துடன் செந்தில்குமார் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து, அவர்கள் போத்தனூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.



சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், செந்தில்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக பாப்பத்தி (தாய்), சீனிவாசன் (மாமா), ராணி (சித்தி) உட்பட 5 உறவினர்களிடம்போலீசார் தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...