கோவையில் விடிய விடிய கனமழை: சிங்காநல்லூர் - வெள்ளலூர் தரைப்பாலம் 3வது முறையாக நீரில் அடித்துச் செல்லப்பட்டது

முறையான திட்டமிடல் இன்றி வெள்ளலூர் தரைப்பாலம் அமைக்கப்பட்டதால், அடிக்கடி நீரில் அடித்துச் செல்லப்படுவதும், சீரமைப்பதும் அரங்கேறுவதால், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக, பொதுமக்கள் குற்றச்சாட்டு.



கோவை: கோவையில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்ததால், பல்வேறு பிரதான சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில், கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கோவை மாநகராட்சியுடன் புறநகர் பகுதிகளை இணைக்கும் பிரதான சாலைகளில் ஒன்றான வெள்ளலூர் - சிங்காநல்லூர் சாலையில் உள்ள தற்காலிக தரைப்பாலம் மீண்டும் வெள்ளத்தில் அடித்துச் சென்றது.



இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களில் இந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், அந்த பாதையில், போக்குவரத்து மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.

நொய்யல் ஆற்றின் மீது உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தரைமட்ட பாலம் இடிக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல புதிதாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இரண்டு முறை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



இருப்பினும் மூன்றாவது முறையாக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அந்தச் சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகன‌ ஓட்டிகள் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றி மாநகர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

முறையான திட்டமிடல் இல்லாமல் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்படுவதால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதும், மீண்டும் சீரமைப்பதும் என தொடர்ந்து செய்வதால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...