கடந்த 2020 ஆம் ஆண்டு கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பெண்ணிற்கு 10 ஆண்டு சிறை மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கோவை EC and NDPS கோர்ட் நீதிபதி லோகேஸ்வரன் தீர்ப்பளித்தார்.
கோவை: ஈரோடு மாவட்டம் பள்ளபாளையம் அடுத்த சுதானந்த நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி பூங்கோதை (46) வெளியூர்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வருவதாக கோவை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில், அவரை கண்காணித்து வந்த போலீசார், கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி, ஈரோடு வீரப்பன்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பூங்கோதையை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது, அவரிடம் இருந்து 16 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, பூங்கோதையை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கோவை இ.சி., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதுதொடர்பான வழக்கு கோவை இ.சி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை முடிந்து நேற்றைய தினம் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதில் குற்றம் சாட்டப்பட்ட பூங்கோதைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி லோகேஸ்வரன் தீர்ப்பளித்தார்.