என் ஆடுகளை விஷம் வைத்து கொன்று விட்டனர் - நீதி வேண்டி ஒலிபெருக்கி மூலம் தர்ணாவில் ஈடுபட்ட நபரால் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு.

வேடப்பட்டி பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் தனது ஆடுகளுக்கு விஷம் வைத்து கொன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒலிபெருக்கியுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.


கோவை: கோவை வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். கடந்த 2019ம் ஆண்டு இவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் மூன்று பேர், இவர் வளர்த்து வந்த ஐந்து ஆடுகளை விஷம் வைத்துக் கொன்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து, பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வடவள்ளி காவல் நிலையம், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த போதிலும், நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒலிபெருக்கியுடன், ஜெகந்நாதன்தர்ணாவில் ஈடுபட்டார்.



உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், அவரிடம் இருந்த ஒலிபெருக்கியை பறிமுதல் செய்ததால், காவல்துறையினரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரை சமாதானம் செய்த காவலர்கள் அவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மனு அளிக்கஅழைத்துச் சென்றனர்.

குறை தீர்ப்பு நாளான இன்று நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லும் ஆட்சியர் அலுவலகத்தில், நீதி வேண்டி மற்றும் அலுவலர்களின் கவனத்தை ஈர்க்க ஒலிபெருக்கியில்தன் பிரச்சனையை கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புதர்ணாவில் ஈடுபட்ட நபரால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டமான சூழல் நிலவியது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...