கோவையில் அரசு பேருந்து ஓட்டுநரை வெட்டிய போதை நபர் கைது….!

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில், போதையில் ரகளையில் ஈடுபட்டு, அரசு பேருந்து ஓட்டுநரை கத்தியால் குத்திய நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூருக்கு பெரியபுத்தூர் வழியாக 1C, 25 நகர பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அந்த பேருந்தில் ஓட்டுநராக மூடுதுறை மீனம்பாளையம் கிராமத்தை சேர்ந்த அருணாச்சலக்குமார் (41) என்பவரும், நடத்துநராக கணேசன் என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று இரவு வழக்கம் போல், மேட்டுப்பாளையத்தில் இருந்து பேருந்து அன்னூருக்கு புறப்பட்டது. அப்போது, பேருந்து வெளியே வரும் வழியில் சாலையின் நடுவே போதையில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் ஓட்டுநரை தகாத வார்த்தையால் திட்டி கீழே இறங்க கோரி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, அந்த நபரை ஓட்டுநர் அருணாச்சலகுமார் கீழே இறங்கிவிட்டு ஓரமாக செல்ல வலியுறுத்தியுள்ளார். அப்போது, தீடீரென அந்த போதை நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஓட்டுநர் அருணாச்சலகுமாரின் கை மற்றும் வயிற்றில் குத்தியுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத அருணாச்சல குமார் படுகாயம் அடைந்துள்ளார்.



அவரை சக ஊழியர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அரசு பேருந்து ஓட்டுநரை கத்தியால் குத்திய நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் மணிகண்டன் (40) என்பதும் அவர் மேட்டுப்பாளையம் பேருந்து நிலைய பகுதியில் டாஸ்மாக் கடைக்கு வருபவர்களிடம் காசு வாங்கி மதுகுடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த நிலையில், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் காவலர்கள் இல்லாததால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். எனவே, போதுமான காவலர்களை நியமித்து பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பயணிகள் மற்றும் பெண்கள் பொது மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...