பொள்ளாச்சி வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த காமாட்சி சுந்தரம் என்பவர் கடந்த 16 ஆம் தேதி ஏற்பட்ட வாகன விபத்தில் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார்.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் காமாட்சி சுந்தரம்.

இவர் பொள்ளாச்சி வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி வழக்கம் போல காவலர் காமாட்சி சுந்தரம் பணிக்குச் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பியுள்ளார். அப்போது, தாமரைக்குளம் அருகே வந்த போது, எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் காமாட்சி சுந்தரத்தின் வாகனம் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து, சாலையில் சென்றவர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட, காமாட்சி சுந்தரம் நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக பொள்ளாச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.