கோவையில் ஆடம்பர வாழ்க்கைக்காக கஞ்சா விற்பனை செய்த 5 கல்லூரி மாணவர்கள் கைது.

நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டே நெய்க்காரப்பட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கஞ்சாவை வாங்கி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.



கோவை: கோவை அவிநாசி சாலை, நவ இந்தியா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பீளமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த 5 இளைஞர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.

பின்னர், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள், திருப்பூர் காந்திநகர் 2வது தெருவை சேர்ந்த சூர்யா (21), பிச்சம்பாளையம் புதூரை சேர்ந்த கவியரசு (19), மனோஜ்குமார் (19), இளையபாரதி (19) மற்றும் அவிநாசி காசி கவுண்டன்புதூரை சேர்ந்த அரவிந்த் (19) என்பது தெரியவந்தது.

மேலும், இவர்கள் அனைவரும் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவதும், வெளியே அறை எடுத்து தங்கியிருந்து நெய்க்காரப்பட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கஞ்சாவை வாங்கி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...