கோவை அரசு மருத்துவ கல்லூரியில் முதுகலை நரம்பியல் துறையில் 2ஆம் ஆண்டு படித்து வரும் ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த பிரவீன் அன்னதடா (33) என்பவர், அவர் தங்கியிருந்த தனியார் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். பீளமேடு போலீசார் விசாரணை.
கோவை: ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் பிரவீன் அன்னதடா (33). இவர் தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். பின்னர், கோவையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி , கோவை அரசு மருத்துவ கல்லூரியில் முதுகலை நரம்பியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
பிரவீன் அன்னதடா, எம்.பி.பி.எஸ் படித்த சான்றிதழை சமர்பிக்காமல் தாமதம் செய்ததாக தெரிகிறது. இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் பிரவீன் அன்னதடாவிடம் கேட்டுள்ளனர். பின்னர், மாணவர் இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவரின் பெற்றோர், விரைவில் சான்றிதழை பெற்று சமர்பிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பிரவீன் அன்னதடா மன உலைச்சலுடன் காணப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் பிரவீன் அன்னதடா கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால், அவருடன் படிக்கும் சக மாணவர்கள் மற்றும் துறை தலைவரும் அவரை செல்ஃபோனில் தொடர்பு கொள்ள முயரசிசுதுள்ளனர்.
ஆனால் அவரது செல்போன் தொடர்ந்து அனைத்து (switch off)ல் வைத்திருந்ததால்,, இறுதியாக அவரது பெற்றோருக்கு தகவல் அளித்தனர். பெற்றோர்களும் செல்போனில் அழைத்து பார்த்த நிலையில் இன்று காலை கோவை வந்து அவர் தங்கியிருந்த விடுத்திக்குச் சென்று பார்த்தனர். அப்போது அவர் அறையில் சடலமாக இருந்தது தெரியவந்தது.
மேலும் அவர் அருகே விஷ பாட்டில் இருந்ததுள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர் பீளமேடு காவ்ல் நிலயத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீஸார் பிரவீன் அன்னதடா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சான்றிதழை கல்லூரியில் கொடுக்க முடியாத மன உலைச்சலில் இருந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டாரா..? அல்லது வேறு காரணம் உள்ளதா..?. என்பது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.