கோவை வார்டு 45க்கு உட்பட்ட சாய்பாபா காலனி பகுதியில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆணையர் மு.பிரதாப் மக்களிடம் குடிநீர் மற்றும் சுகாதாரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர், அன்னை சத்யா நகரில் அமையவுள்ள நகர் நல மைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சியின் 45 ஆவது வார்டுக்குட்பட்ட சாய்பாபா காலனி பகுதியில் உள்ள, சின்னசுப்பண்ணா வீதியில் மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பொதுமக்களின் வீடுகளுக்கு சென்ற அவர் குடிநீர் விநியோகம் சீரான முறையில் செய்யப்படுகிறதா..? பொது இடங்களில் தினமும் தூய்மை பணியாளர்கள் பணிகளை முறையாக செய்கிறார்களா? என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும், குறைகள் ஏதேனும் இருந்தால் தயக்கமின்றி தெரிவிக்கலாம், எனக் கூறினார்.

பின்னர், குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் கொடுக்கும் போது கட்டாயமாக தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றும், அப்போது தான் மறு சுழற்சி உள்ளிட்ட பணிகளை முழுமையாக செய்ய முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதைதொடர்ந்து, அங்கு பணியில் இருந்த தூய்மை பணியாளர்களிடம் கலந்துரையாடிய மாநகராட்சி ஆணையாளர், குப்பை தரம் பிரித்து சேகரிப்பது குறித்து கேட்டறிந்தார்.

இதையடுத்து, சாய்பாபா காலணி, அன்னை சத்யா நகரில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமையவுள்ள நகர் நல மைய கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, மேற்கு மண்டல உதவி ஆணையாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.