புதைவட மின்சார கேபிள் அமைக்கும் பணிகள் நிறைவு - பரிசோதனை காரணமாக உக்கடம், கரும்புக்கடை பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கக்கூடும்.

மின் கம்பிகளுக்கு இணைப்பு கொடுத்து பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற உள்ளதால், உக்கடம், கரும்புக்கடை பகுதிகளில் மின் விநியோகம் அவ்வப்போது நிறுத்தப்படும் என கோவை மாநகர் மையக் கோட்ட செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.



கோவை: உக்கடம் அருகேயுள்ள ஆத்துப்பாலம் சாலையில்450 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில், உக்கடம் பேருந்து நிலையம் அருகே உயர் அழுத்த மின் கம்பிகள் மேம்பாலத்தின் குறுக்கே செல்வதால் மேம்பாலம் அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, உக்கடம் பெரியகுளம் கரையிலிருந்து துணை மின் நிலையம் வரை உயர் அழுத்த கம்பிகளை புதைவட கேபிள் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெற்று வந்தன.

தற்போது, உக்கடம் குளக்கரையில் இருந்து துணை மின் நிலையம் வரை பள்ளம் தோண்டப்பட்டு அதில், உயர் அழுத்த மின்சாரத்தை தாங்கக்கூடிய புதைவட கேபிள் பதிக்கப்பட்டுள்ளன.

புதைவிட மின்சார கேபிளுக்கு இணைப்பு கொடுப்பதற்காக, பெரிய மின் கோபுரம் அமைக்கும் பணி அனைத்தும் நிறைவடைந்து.

தற்போது, புதைவிட மின்சார கேபிளுக்கு இணைப்பு கொடுத்து பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக, கோவை மாநகர் மையக் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:

உக்கடம் மேம்பால பணிக்காக 110 கிலோ வாட் திறன் கொண்ட புதைவட மின்சார கேபிள் பதிக்கும் பணி நிறைவடைந்து, மின் இணைப்பு கொடுத்து பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற உள்ளது.

இதனால், உக்கடம்மற்றும் கரும்புக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் சில நேரங்களில்மின்விநியோகம் நிறுத்தப்படும், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...