பெ.நா.பாளையம் மற்றும் ஜி.என்.மில்ஸ் சந்திப்பு பாலம் ஆகிய பாலங்களின் பணிகளை விரைந்து முடிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர, அலுவலர்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
கோவை: பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறையினரால் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை துரிதப்படுத்துவதற்காக, மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், கோவை மற்றும் மேட்டுப்பாளையம் பகுதி அணுகு சாலை அமைக்க தேவைப்படும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குடிநீர் குழாய்களை இடமாற்றம் செய்திட வேண்டும், என்றார்.
மேலும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், பெரியநாயக்கன்பாளையம் பாலம் ஜி.என்.மில்ஸ் சந்திப்பு பாலம் ஆகிய பாலங்களின் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் ரமேஷ், உதவி கோட்ட பொறியாளர் முரளிகுமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்கள் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவன அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.