கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 26 மனுக்கள் மேயர் கல்பனாவிடம் வழங்கப்பட்டது. மனுக்களை பெற்றுக் கொண்ட மேயர், உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கோவை: கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில், மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று பொதுமக்களின் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
மனாகரட்சி துணை ஆணையாளர், மரு.மோ.ஷாமிளா அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை வழங்கினர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில் வரி, சொத்து வரி, காலியிட வரி, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் அடங்கிய 26 கோரிக்கை மனுக்களை மேயர் கல்பனாவிடம் வழங்கினர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் கல்பனா, மனுக்கள் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளார்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், நகரமைப்பு அலுவலர் கருப்பாத்தாள், மண்டல உதவி ஆணையாளர்கள் அண்ணாதுரை, மோகனசுந்தரி, முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.