கோவையில் குறைதீர்ப்பு கூட்டம்: சாலை வசதி, குடிநீர் என பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மேயர் உத்தரவு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 26 மனுக்கள் மேயர் கல்பனாவிடம் வழங்கப்பட்டது. மனுக்களை பெற்றுக் கொண்ட மேயர், உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில், மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று பொதுமக்களின் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

மனாகரட்சி துணை ஆணையாளர்‌, மரு.மோ.ஷாமிளா அவர்கள்‌ முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை வழங்கினர்.



இந்த கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்‌, சாலை வசதி, மின்விளக்குகள்‌, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில் வரி, சொத்து வரி, காலியிட வரி, பெயர்‌ மாற்றம்‌, மருத்துவம்‌, சுகாதாரம்‌, கல்வி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள்‌ அடங்கிய 26 கோரிக்கை மனுக்களை மேயர் கல்பனாவிடம் வழங்கினர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் கல்பனா, மனுக்கள் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளார்கள்‌, பொறியாளர்கள்‌ மற்றும்‌ அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.

இக்கூட்டத்தில்‌, நகரமைப்பு அலுவலர்‌ கருப்பாத்தாள்‌, மண்டல உதவி ஆணையாளர்கள்‌ அண்ணாதுரை, மோகனசுந்தரி, முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...