கோவையில் சுதந்திர தினத்தன்று மதுபான விற்பனையில் ஈடுபட்ட 44 பேர் கைது – 797 மதுப்பாட்டிகள் பறிமுதல் - எஸ்.பி நடவடிக்கை

கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின்படி நடத்திய சோதனையில், சட்ட விரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த 797 மது பாட்டில்கள் மற்றும் அவற்றை விற்பனை செய்த 44 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: நேற்று 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மது விற்பனை செய்ய மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தார். தடையை மீறி மது விற்பனை செய்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தடையை மீறி மது விற்பனை செய்யும் இடங்கள் மற்றும் நபர்களை கண்காணிக்க, கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவிட்டிருந்தார். அவரது உத்தரவின் பேரில், கோவை மாவட்டத்தில் அனைத்து உட்கோட்ட காவல்துறையினர்களும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில், சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 44 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 797 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, விற்பனையில் ஈடுப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...