'சுதந்திர வனம்‌': கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில் மரம் நடும் விழா

75வது சுதந்திர தினவிழாவையொட்டி, “சுதந்திர வனம்‌” என்ற பெயரில் மரம் நடும் நிகழ்ச்சியில், பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்‌. வெ. கீதாலட்சுமி துவக்கி வைத்து 76 அரியவகை செடிகளை நடவு செய்தார்.


கோவை: நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு “சுதந்திர வனம்‌” என்ற தலைப்பில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவையில் உள்ள தாவரவியல்‌ பூங்காவில்‌ நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர்‌. வெ. கீதாலட்சுமி கலந்து கொண்டு தமிழ்நாட்டின் மாநில மரமான பனை விதைகளை நடவு செய்து சுதந்திர வனத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர், அங்கு அமைக்கப்பட்ட 20 வகையான ரோஜாக்களைக்‌ கொண்ட ரோஜா தோட்டத்தினை பல்கலைக் கழக துணைவேந்தர் தொடங்கி வைத்து பேசிய துணைவேந்தர், "இந்த "சுதந்திர வனம்‌" மற்றும்‌ ரோஜா தோட்டம் ஆகியவை இயற்கை ஆர்வலர்கள்‌, தாவரவியலாளர்கள்‌, விஞ்ஞானிகள்‌, மாணவர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ பயன்படுத்தும்‌ விதமாக அமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

மேலும், இந்த நிகழ்வில், சுற்றுச்‌ சூழல்‌ ஆர்வலர்‌ எம்‌.யோகநாதன்‌ கலந்துகொண்டு, நாவல்‌ மரக்கன்றை நடவு செய்தார்‌. இதேபோல், இந்த நிகழ்வில் பறவைகள்‌ மற்றும்‌ தேனீக்களை‌ ஈர்க்கும் வகையிலான 76 விதமான அரிய வகை செடிகள் நடவு செய்யப்பட்டன.



இந்த மரம் நடும் நிகழ்வை வேளாண் பல்கலைக்கழக தோட்டக்கலைத்துறை முதன்மையர் முனைவர்‌. பெ. ஐரிலர்‌ வேதமணி மற்றும் மலரியல்‌ துறை பேராசிரியர் மற்றும் தலைவரான ராஜாமணி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...