கோவையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த வளர்ப்பு தந்தையின் நண்பர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

கோவையில் 10 வயது சிறுமிக்கு ஒராண்டாக பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தையின் நண்பரை, பெற்றோரின் புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: ஆலந்துறை அருகே பெண் ஒருவர் தனது 12 வயது மகன் மற்றும் 10 வயது மகளுடன் வசித்து வருகின்றார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரிடம் இருந்து பிரிந்து இரண்டாவதாக வேறொரு நபரை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், சிறுமி வீட்டில் அழுது கொண்டு இருந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் விசாரித்த போது, பக்கத்து வீட்டில் இருக்கும் தனது வளர்ப்பு தந்தையின் நண்பர் தனக்கு ஓராண்டாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததும். இதை வெளியில் சொல்லக் கூடாது என அவர் மிரட்டியதும் தெரியவந்துள்ளது.

இதனைக் கேட்டு அதிர்ந்த பெற்றோர், சைல்டு லைன் அழைத்து பேசியுள்ளனர். சைல்டு லைன் அமைப்பின் வழிகாட்டுதலின் படி, சிறுமியின் பெற்றோர் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...