கோவையில் பா.ஜ.க நடத்திய சுதந்திர தின விழா பேரணி..!

மாவட்ட பா.ஜ.க.அரசு தொடர்பு பிரிவு சார்பில் சுதந்திர தின பேரணியும் காந்திபுரம், சிவானந்தாகாலனி, லட்சுமி மில்ஸ், போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தேசிய கொடிகளும் வழங்கினர்.



கோவை: 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக வீடுகள் தோறும் தேசிய கொடியேற்றி மக்கள் கொண்டாட வேண்டும் என பிரதமர்வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்ட பா.ஜ.க.சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பா.ஜ.க.அரசு தொடர்பு பிரிவு சார்பில் சுதந்திர தின பேரணி மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாவட்ட பா.ஜ.க.அலுவலகத்தில் துவங்கிய பேரணியில் அரசு தொடர்பு பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பா.ஜ.க.மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார்.



பேரணியில் பா.ஜ.க.கலைச்சார பிரிவு சண்முகம் குழுவினர் பாரதமாதா, சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் பிரதமர் மோடி போன்று வேடமணிந்துவாகனங்களில் ஊர்வலமாக சென்றனர்.பா.ஜ.க.மாநில, மாவட்ட நிர்வாகிகளும் பேரணியாக சென்றனர்.



தொடர்ந்து காந்திபுரம், சிவானந்தாகாலனி, லட்சுமி மில்ஸ்,போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தேசிய கொடிகளையும் வழங்கினர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...