கோவை வால்பாறை அரசு கலை கல்லூரியில் தேசிய கொடியை ஏற்றி கொண்டாடிய மாணவ-மாணவிகள்..!

வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கல்லூரியில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர். கல்லூரி வளாகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளின் பேரணி நடைபெற்றது.


கோவை: வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் 75-வது சுதந்திர தினத்தை கொடி ஏற்றி கொண்டாடினர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் வருகிற 15ம் தேதி 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கல்லூரியில் தேசியக் கொடி ஏற்றி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தி 75-வது சுதந்திர தினம் என்பதால் 75 போன்று மாணவ மாணவிகள் தேசிய கொடியுடன் நின்று மரியாதை செலுத்தினர்.



மேலும் கல்லூரி வளாகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்டவர்கள் பேரணி நடைபெற்றது, அரசு கலைக் கல்லூரியில் துவக்கப்பட்ட பேரணி பிரதான சாலையில் வழியாக காந்தி சிலை பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் கல்லூரி வளாகத்துக்கு வந்தனர்.

தேசிய கொடியின் பெருமையைப் பற்றி கல்லூரி முதல்வர் செல்வமுத்துகுமாரசாமி பேசினார். மேலும், இந்த விழாவில் வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு தேசிய கொடி வழங்கினார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...