கோவை வால்பாறையில் திமுக நகர நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்..!

வருகிற 24-ஆம் தேதி தமிழக முதல்வர் பொள்ளாச்சி வருகை புரிவதையொட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேரிடர் கால மீட்பு பணிகள் நகராட்சி மூலம் உடனடியாக நிறைவேற்ற முதல்வரிடம் வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கோவை: வால்பாறையில் திமுக நகர நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்குத் தமிழக முதல்வர் வருகையையொட்டி திமுக நகரச் செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் நகர நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நகர அவைத்தலைவர் சி.செல்லமுத்து, துணைச் செயலாளர்கள் சரவணபாண்டியன், ஈ.கா.பொன்னுச்சாமி, சூரிய பிரபா பொருளாளர் வெ.சுப்பையா மாவட்ட பிரதிநிதிகள் மொய்தீன் பாய், தே.டென்சிங், த.ம.ச.செந்தில் குமார் ஆகியோர் முன்னிலையில் வால்பாறையில் உள்ள கிரீன் ஹில்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் வருகிற 24-ஆம் தேதிதமிழக முதல்வர் பொள்ளாச்சி வருகை புரிவதையொட்டி வால்பாறைதிமுக சார்பாக பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும், அனைத்து வார்டு பகுதிகளிலும் முதல்வர் அறிவிப்பின் படி முதியோர் உதவித்தொகை, விதவை தொகை வழங்க துரித ஏற்பாடு செய்ய வேண்டும்.

வால்பாறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேரிடர் கால மீட்பு பணிகள் நகராட்சி மூலம் உடனடியாக நிறைவேற்ற முதல்வரிடம் வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...