கோவையில் நடமாடும் நூலகத்தை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராஜா திறந்து வைத்தார்

ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் "உங்களைத் தேடி நூலகம்" திட்டத்தின் கீழ் நடமாடும் நூலகத்தை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராஜா இன்று திறந்து வைத்தார்.


கோவை: கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில்" உங்களைத் தேடி நூலகம் " திட்டத்தின் கீழ் நடமாடும் நூலகத்தை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராஜா இன்று திறந்து வைத்தார்.



முதல் கட்டமாக, இந்த நடமாடும் நூலக வாகனம் கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், குறிப்பாக அரசு பள்ளிகளுக்கு செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.



இதில், இந்தியா வரலாறு குறித்த புத்தகங்கள், தமிழ் இலக்கணம் சார்ந்த புத்தகங்கள் தமிழ் வரலாற்று புத்தகங்கள், பள்ளி சிறுவர்களுக்கான கதைகள் ஆகிய புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.



அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி கலையரங்கத்தில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் கோயமுத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நடைபெறும் திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.





அதனைத் தொடர்ந்து மகளிர் சுய உதவி குழு பயனாளிகளுக்கு காசோலையும், தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டன.



இந்நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, மாவட்ட ஆட்சியர் சமீரன் உட்பட மாமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...