கோவை மாகாளியம்மன் கோவிலில் 5 டன் காய்கறிகளை கொண்டு தேசியக்கொடி அலங்காரம்..!

இந்த அலங்காரத்தில் திருக்கோவில் முன்பாக காய்கறிகளால் தேசிய கொடிகம்பம் அமைக்கப்பட்டு தேசிய கொடி வடிவமைக்கப்பட்டிருந்தது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.



கோவை: கோவை பெரியகடை வீதி பகுதியிலுள்ள மாகாளியம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆடி வெள்ளி கிழமையும் சிறப்பான அலங்கார வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் இன்று ஆடி மாத கடைசி வெள்ளி மற்றும் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுமார் 5 டன் எடையிலான காய்கறிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.



இந்த அலங்காரத்தில் திருக்கோவில் முன்பாக காய்கறிகளால் தேசிய கொடிகம்பம் அமைக்கப்பட்டு தேசிய கொடி வடிவமைக்கப்பட்டிருந்தது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.



அதேபோல் கோவில் வளாகம் முழுவதும் தேசிய கொடி அமைப்பை போன்று மூவர்ணத்தில் அசோக சக்கரத்துடனான அலங்காரம் செய்யப்பட்டதுடன் அம்மனுக்கும் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.



ஆடி மாத கடைசி வெள்ளி கிழமையில் வழிபாட்டுக்கு வந்த பக்தர்களை காட்டிலும், காய்கறிகளால் செய்யப்பட்ட அலங்காரத்தை காணவே ஏராளமான மக்கள் மாகாளியம்மன் கோவிலுக்கு வருகை தந்து அம்மனை தரிசித்து சென்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...