கோவையில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் TAMCO முகாமில் 600-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்..!

சிறு குறு தொழில் தொடங்குவதற்கு தொழில் கடன் மற்றும் ஏழை எளியோருக்கான தனிநபர் கடனுக்கான ஆலோசனை, தொழில் கடனுக்கான விண்ணப்பம் வழங்கும் முகாம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் கண் சிகிச்சை, இலவச கண் கண்ணாடி வழங்கும் முகாம் குறிச்சி பிரிவு, கஸ்தூரி கார்டன் பகுதியில் நடைபெற்றது.


கோவை: சமூக நீதி கூட்டமைப்பு சார்பாக சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) மூலமாக நடைபெற்ற முகாமில் 600-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன் அடைந்தனர்.



சமூகநீதி கூட்டமைப்பு சார்பாக (11/08/22) வியாழன்று சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகம் (TAMCO) மூலமாக குறிச்சி பிரிவு, கஸ்தூரி கார்டன் பகுதியில் சிறு குறு தொழில் தொடங்குவதற்கு தொழில் கடன் மற்றும் ஏழை எளியோருக்கான தனிநபர் கடனுக்கான ஆலோசனை, தொழில் கடனுக்கு விண்ணப்பம் வழங்கும் முகாம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் கண் சிகிச்சை, இலவச கண் கண்ணாடி வழங்கும் முகாம் நடைபெற்றது.



இம்முகாமில் 95-வது வார்டு மாமன்ற உறுப்பினர் S.A காதர் தலைமையில், சமூகநீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் G.M. ரபீக் முன்னிலையில் நடைபெற்றது.



சிறப்பு விருந்தினராக சிறுபான்மை நல பிரிவு துணை ஆட்சியாளர் ரமண கோபால், சூப்பிரண்டு சேகர், CCB AGM மீனாம்பிகை, வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பெண் உரிமை, தொழில் வாய்ப்பு, அரசாங்க திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இம்முகாமில் 100-பெண்களுக்கு 8-மகளிர் குழு ஆரம்பிக்கப்பட்டு 180-பேருக்கு தனிநபர் கடனுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளது. 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் சிகிச்சை அளித்து இலவச கண் கண்ணாடியும் வழங்கப்பட்டுள்ளது. குறிச்சி பிரிவு, கஸ்தூரி கார்டன் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட பயனாளிகள் இம்முகாமில் பயன் அடைந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...