கோவையிலிருந்து கேரளாவுக்கு கடத்த சேகரிக்கப்பட்ட 3-டன் ரேஷன் அரிசி பறிமுதல் - கேரள இளைஞர் கைது..!

விசாரணையில் கோவையில் சேகரிக்கப்படும் ரேஷன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி அதை கேரளாவிற்கு கடத்தி சென்று, அதிக லாபத்திற்கு விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் 3-டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.


கோவை: கேரளா கடத்த முயன்ற 3-டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்த போலீசார் கேரளாவை சேர்ந்த நபரை கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

கோவை குனியமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசின் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசியை பொதுமக்களிடம் மலிவு விலைக்கு வாங்கி அதை கேரளாவிற்கு கடத்தி அதிக லாபத்திற்கு விற்பனை செய்யப்படுவதாகவும், பொதுமக்களிடம் வாங்கிய ரேசன் அரிசியை நள்ளிரவு நேரத்தில் கேரளாவுக்கு கடத்த உள்ளதாகவும், குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சார்பு ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நள்ளிரவு 12.30 மணிக்கு வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

மேலும் 75 கிலோ மூட்டைகளாக சுமார் 3 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த மார்டின் (42) என்பதும், கேரளாவிற்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து மார்டினை கைது செய்த போலீசார், 3 டன் ரேஷன் அரிசி மற்றும் நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வாகன உரிமையாளர் நிஜாம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...