மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கில், இறுதி அறிக்கை தாக்கல் செய்யக் கூடாது' என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான வழக்கில் விசாரணை வரும் 25-ம் தேதிக்கு முதல் பெஞ்ச் தள்ளிவைத்துள்ளது.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில், பல்வேறு பணிகளுக்கு 'டெண்டர்' வழங்கியதில் முறைகேடு நடந்ததாக, முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது வழக்கு பதிவு செய்யவும், சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கவும் கோரி, அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதியும் இதே குற்றச்சாட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த 2018ல் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, வேலுமணிக்கு எதிராக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, ஏற்கனவே ஆரம்பகட்ட விசாரணை முடிந்து, குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என கூறப்பட்டதால், லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி, முன்னாள் அமைச்சர் வேலுமணி மனு தாக்கல் செய்தார்.
அறப்போர் இயக்கம், ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை வாபஸ் பெறுவதாகவும், அதற்காக மனுத் தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து விசாரணையை, வரும் 25ம் தேதிக்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.லஞ்ச ஒழிப்பு போலீசார், விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் எனக் கூறிய முதல் பெஞ்ச், இவ்வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டது.