பெங்களூரில் இருந்து மாலி என்ற நாட்டிற்கு 92 பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள் இருந்து புகை ஒலி எச்சரிக்கை கிளம்பியதால், அந்த விமானம் அவசரமாக கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
கோவை: பெங்களூரில் இருந்து மாலி என்ற நாட்டிற்கு 92 பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள் இருந்து புகை ஒலி எச்சரிக்கை கிளம்பியதால், அந்த விமானம் அவசரமாக கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், விமானத்தில் இருந்து திடீரென புகை எச்சரிக்கை ஒலி எழும்பியதால், விமான பைலெட் அவசரமாக கொச்சின் விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரியுள்ளார். ஆனால், கொச்சின் விமான நிலைய அதிகாரிகள் கோவையில் தரையிரக்குமாறு அறிவுறுத்தினர்.

இதையடுத்து, கோவை விமான நிலையத்தில் பயணிகள் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. முன்னதாக, தீயணைப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோவை விமான நிலைய அதிகாரிகள் தயார் நிலையில் வைத்திருந்தனர்.
தற்போது, அனைத்து பயணிகளும் பத்திரமாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு, தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.