கோவை நொய்யல் ஆற்றில் துணி துவைக்க சென்று மாயமான மூதாட்டியை தேடும் பணியில் தொண்டாமுத்தூர் தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
கோவை: கோவை நொய்யல் ஆற்றில் மாயமான மூதாட்டியை சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றில் இறங்கி உடலைத் தேடி வருகின்றனர்.
கோவை சித்திரை சாவடி அணையில் துணி துவைக்கச் சென்ற மூதாட்டி வீடு திரும்பாததால் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அணை மற்றும் நொய்யல் ஆற்றில் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை ஆலந்துறை அடுத்த சீனிவாசபுரம் கள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சின்ன கமலம்மாள் (60). சித்திரைச்சாவடி அணைக்கு துணி துவைக்கச் சென்றதாகத் தெரிகிறது.
நீண்ட நேரம் ஆகியும் வராததால் உறவினர்கள் அந்த பகுதிக்குச் சென்று பார்க்கும் போது அவருடைய செருப்பு மற்றும் துண்டு அணை பகுதியில் இருந்ததால் ஆற்றில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த உறவினர்கள் தொண்டாமுத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் ஆற்றில் இறங்கி மூதாட்டியின் உடலை தேடி வருகின்றனர்.