75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை பொள்ளாச்சியில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தேசிய கொடி வழங்கல்..!

75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக பொள்ளாச்சி நகராட்சி சார்பில் உடுமலை ரோடு டீச்சர்ஸ் காலனி பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக பொள்ளாச்சியில் நகராட்சி சார்பில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தேசிய கொடி வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி நகராட்சி சார்பில் உடுமலை ரோடு டீச்சர்ஸ் காலனி பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



பள்ளிகள் படிக்கும் சுமார் 40 மாணவ மாணவிகளுக்கு, துணியால் செய்யப்பட்ட தேசிய கொடி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் மற்றும் திமுக நகர செயலாளர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் தலைமை ஏற்று மாணவர்களுக்கு கொடிகளை வழங்கினர்.

மேலும், இந்த நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் தர்மராஜ், ஆறுச்சாமி, தங்கவேல், நகர் மன்ற கவுன்சிலர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைத்து மாணவரும் மாணவிகளும் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அவரவர் வீடுகளில் இந்த தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என்று நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், பள்ளியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் மையத்தில் சமையலறை, வகுப்பறைகள், போன்ற பகுதிகளில் நகராட்சி தலைவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு பணியாற்றும் சத்துணவு ஊழியர்களிடம் குழந்தைகளுக்குச் சுகாதாரமான உணவு வழங்க வேண்டும் என்றும், சமையலறை உள்ளிட்ட பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...