ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு பொள்ளாச்சி கடைவீதி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து 10-ஆயிரத்து எட்டு வளையல் கொண்டு வளையல் திருவிழா நடைபெற்றது.
கோவை:ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு கோவை பொள்ளாச்சி கடைவீதி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வளையல் திருவிழா நடைபெற்றது.

ஆடி மாதத்தை முன்னிட்டு அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பொள்ளாச்சியில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில், வளையல் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி இன்று ஒரு லட்சத்து 10-ஆயிரத்து எட்டு கண்ணாடி வளையல்கள் கொண்டு திருவிழா நடத்தப்பட்டது. மேலும் இன்று அம்மனுக்கு ஒரு லட்சத்து எட்டு பூக்களை கொண்டு அர்ச்சனையும், ஒரு லட்சத்து எட்டு முறை திரி யேற்றி, ஒரு லட்சத்து எட்டு முறை காயத்ரி மந்திர அர்ச்சனை நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மனை தரிசித்துச் சென்றனர்.