கோவை நகை பட்டறையில் பணியாற்றி வந்த வட மாநிலத்தை சேர்ந்த எட்டு குழந்தை தொழிலாளர்கள் மீட்பு…!

கோவை சுக்கிரவார் பேட்டை பகுதியில் செயல்படும் இரண்டு நகைப் பட்டறைகளில், பணிக்கு வைத்திருந்த எட்டு ஆண் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். இதையடுத்து, அந்த 8 வட மாநில குழந்தைகளும் பத்திரமாக குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த புகார் அடிப்படையில், போலீஸ் மற்றும் தேசிய குழந்தை தொழிலாளர் துறை மற்றும் ரயில்வே சைல்ட் லைன் உள்ளிட்ட மாவட்ட அமலாக்க குழுவினர் கோவை பகுதியில் உள்ள நகை பட்டறைகளில் ஆய்வு

மேற்கொண்டனர்.

அதன்படி, சுக்கிரவார் பேட்டை பகுதியில் செயல்படும் இரண்டு நகைப் பட்டறைகளில் ஆய்வு மேற்கொண்டதில், எட்டு ஆண் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 8 வட மாநில குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டு அனைவரும் கோவை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து, அங்கிருந்து அனைவரும் அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர், சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது.

இதனிடையே, சிறுவர்களை பணிக்கு அமர்த்திய நிறுவன உரிமையாளர்கள் இருவர் மீதும் காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தொழிலாளர் துறையின் மூலம் நீதிமன்றத்தில் 1986 ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...