கோவை அவினாசி சாலையில் திமுக போஸ்டர்களை அகற்ற கோரி பாஜகவினர் தர்ணா - போலீசார் குவிப்பு - பரபரப்பு…!

அவினாசி சாலையில் திமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்களை அகற்ற வலியுறுத்தி, பாஜகவினர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு திமுகவினரும் கூடியதால், போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை அவினாசி சாலையில் திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்ற கோரி பாஜகவினர் தர்ணாவில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், மேம்பால தூண்கள் மற்றும் பொது இடங்களில் விளம்பர போஸ்டர்கள் ஒட்ட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், கோவை அவினாசி சாலையில் திமுக சார்பில் கடந்த ஜூலை 13 தேதி தமிழக முதல்வர் கோவை வருவதாக இருந்த போது அவரை வரவேற்க அரசின் சாதனை விளக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

ஆனால் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், முதல்வர் வருகை வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனிடையே கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டத்தில் மேல்பாலம் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள போஸ்டர்களை 10 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.

ஆனால் அவினாசி சாலையில், திமுக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றப்படாததால், நேற்று பாஜகவினர் அவினாசி சாலை மேம்பாலத் தூண்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்ற வந்தனர்.



அப்போது, அங்கு திமுகவினரும் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.



இரு தரப்பினரிடையே, கைகலப்பு சூழல் ஏற்பட்ட நிலையில் போலீசார் இரு தரப்பினரையும் நீண்ட நேரத்திற்கு பிறகு கலைத்தனர்.

இந்நிலையில், பாஜகவினர் சாலை ஓரத்தில் அமர்ந்து போஸ்டர்களை அகற்ற கோரி தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.



அங்கு திமுகவினரும் கூடியதால், போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.



இதனால், அவினாசி சாலை பகுதியில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது. இரு தரப்பினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...