கோவை உக்கடத்தில் முஸ்லீம் வாலிபர் முன்னேற்ற சங்கத்தின் 80 வது ஆண்டு விழாவில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி பங்கேற்பு!


கோவை உக்கடத்தில் முஸ்லீம் வாலிபர்  முன்னேற்ற சங்கத்தின் 80 வது ஆண்டு விழாவில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது தமிழக அரசுடன் இணக்கமாக நல்லுறவை பேணவே கேரளா விரும்புகிறது எனவும் நீர் பகிர்தல் தொடர்பான பிரச்சனைகளை இருமாநி்ல அரசுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் கருத்து சொல்ல விரும்பவில்லை எனவும் அந்த விவகாரத்தை கேரள அரசு பார்த்து வருவதாகவும் தெரிவித்தார். முல்லை பெரியார் உள்ளிட்ட அணைகளில் இருந்து தண்ணீர் கொடுத்து வருவதாக தெரிவித்த அவர், தமிழகத்தின் தண்ணீர் தேவையை கேரளா புரிந்து இருப்பதாகவும் உம்மன்சாண்டி தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...