திருப்பூரில் 'CPI 25-வது மாநில மாநாடு' - 2024-தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க தீர்மானம் நிறைவேற்றம்..!

2024-தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொடர்வதாகவும், கூட்டணியை மேலும் வலுப்படுத்த 25-வது மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி அளித்துள்ளார்.


கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநில மாநாடு கடந்த நான்கு தினங்களாக திருப்பூரில் நடைபெற்று நேற்றைய தினம் பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெற்றது. இந்த மாநில மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக மூன்றாவது முறையாக முத்தரசன் தேர்வு செய்யப்பட்டார்.

மாநில செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட பின்பு இன்று திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது மாநில மாநாடு பேரணி பொதுக்கூட்டம் ஆகியவை மிக எழுச்சியோடும் முழு கட்டுப்பாட்டோடு எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் சிறப்பாக நடைபெற்று முடிந்ததாகவும் 25 வது மாநில மாநாட்டில் 101 பேர் கொண்ட புதிய மாநில குழு உருவாக்க பட்டிருப்பதாகவும், இதில் ஏராளமான புதியவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொடர வேண்டும் எனவும் கூட்டணியை மேலும் வலுப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், மத்தியில் ஆர்.எஸ்.எஸ் சின் அரசியல் பிரிவே ஆட்சி செய்கிறது.

அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகின்றனர் எனவும், அக்னிபாத் திட்டம் ராணுவத்தை ஆர்.எஸ்.எஸ் ஆக மாற்றும் முயற்சியை ஒன்றிய அரசு மேற்கொள்கிறது. சுதந்திரத்தை பாதுகாப்போம், சோசலிசத்தை இங்கமைப்போம், பாசிசத்தை தோற்கடிப்போம் என்ற முழக்கத்தோடு 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளதாகவும், மின்சார சட்ட திருத்த மசோதா கண்டனத்துக்குரியது, மின்சாரத்தை தனியார் மயமாக்கும் முடிவு, இதனால் தொழில்கள் மட்டுமல்ல சாமானிய மக்களும் பாதிக்கப்படுவர்.

இதனை கண்டித்து ஆகஸ்ட் 30-ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்ற பட்டுள்ளதாகவும், பாஜகவை விட்டு மாநில கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறத் தொடங்கி விட்டனர். பீகார் மாநில அரசியல் நிலவரம் அதற்கு ஒரு சாட்சி என பேட்டியளித்தார். இந்நிகழ்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுப்பராயன், செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...