கோவை பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் யானைகள் செஸ் அணிவகுப்பு விழா..!

12-ஆம் தேதி வரவிருக்கும் உலக யானைகள் தினம் மற்றும் நேற்று கொண்டாடப்பட்ட உலக பழங்குடியினர் தினம் மற்றும் உலக செஸ் விளையாட்டு போட்டி நிறைவு நாள் ஆகியவற்றைக் கொண்டாடும் விதமாக, டாப்சிலிப்பில் சிறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட வன கள இயக்குநர் ராமசுப்பிரமணியம் உத்தரவின்படி, ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் துணி போற்றப்பட்டு செஸ் அணிவகுப்பு நிகழ்ச்சியில் அங்கு பராமரிக்கப்படும் யானைகள் பங்கேற்றன.



ஒன்றன்பின் ஒன்றாக யானைகள் கருப்பு, வெள்ளை நிற துணிகளால் அலங்கரிக்கப்பட்டு, சீத்தல் ஓய்வு விடுதியிலிருந்து டாப்சிலிப் வரவேற்பு மையம் வரை அணிவகுப்பில் பங்கேற்றன.



பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட சதுரங்கப்பலகையை 5 முறை சுற்றி வந்தது.



வித்தியாசமான செஸ் அணிவகுப்பைப் பார்த்த சுற்றுலா பயணிகள், மகிழ்ச்சியில் கைதட்டி யானைகளை உற்சாகப்படுத்தினர். மேலும், செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.



முன்னதாக, நிகழ்ச்சியைத் துணை வன இயக்குநர், மா.கோ.கணேசன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் உதவி வனப் பாதுகாவலர் செல்வம், வனச்சரக அலுவலர்கள் புகழேந்தி, வெங்கடேஷ் மற்றும் வனவர், வனக் காப்பாளர்கள் வேட்டைத் தடுப்புக் காவலர்கள், யானை பாகன்கள் மாவூத், கவாடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...