கோவை போத்தனூர் அருகே மொஹரம் பண்டிகையை துக்க நிகழ்வாக அனுசரித்த ஷியா இஸ்லாமியர்கள்

கோவை போத்தனூர் பகுதியில் ஷியா பிரிவை சார்ந்த இஸ்லாமிய இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் அரபு மொழியில் துக்கப் பாடல்கள் பாடி வழிபட்டனர். தொழுகைக்குப் பின், இளைஞர்கள் அவர்களது உடலில் ரத்தம் வழிய மார்பில் அடித்துக் கொண்டு மொஹரம் பண்டிகையை துக்க நிகழ்வாக அனுசரித்தனர்.



கோவை: கோவை மாவட்டம் போத்தனூர் அருகே ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் மொஹரம் பண்டிகையை உடலில் ரத்தம் வழிய அடித்துக் கொண்டு துக்க நிகழ்வாக அனுசரித்தனர்.

உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் மொஹரம் பண்டிகை இன்று அனுசரிக்கப்படுகிறது. ரமலானைப் போலவே, மொஹரம் பண்டிகையும் சந்திரன் பார்க்கும் தேதியைப் பொறுத்து கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொண்டாடப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசின் தலைமைக் காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.



இதில், இஸ்லாமிய நாள் காட்டியின்படி முதல் மாதமான மொஹரம் மாதத்தின் பத்தாம் தேதி இமாம் உசேன் மறைவினை நினைவு கூறும் விதமாக ஷியா பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள், மொஹரம் பண்டிகையை துக்க நிகழ்வாக அனுசரித்து வருகின்றனர்.



இந்த நிகழ்வில், இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் அரபு மொழியில் துக்கப் பாடல்கள் பாடி வழிபடுவர்.



அதன்படி, கோவை போத்தனூர் பகுதியில் ஷியா பிரிவை சார்ந்த இஸ்லாமியர்கள் தொழுகைக்குப் பின்னர், அவர்களது உடலில் ரத்தம் வழிய மார்பில் அடித்துக் கொண்டு மொஹரம் பண்டிகையை துக்க நிகழ்வாக அனுசரித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...