10 நிமிடத்தில் 50 ரைம்ஸ் பாடல்கள் பாடி அசத்தல்..! - இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ்சில் இடம் பிடித்த கோவை மாநகராட்சி பள்ளி மாணவி...!

மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில் யூ.கே.ஜி பயின்று வரும் இனியா 10 நிமிடங்களில் ஆங்கிலத்தில் உள்ள 50 குழந்தைகளுக்கான பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.



கோவை: கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில் யூ.கே.ஜி பயின்று வரும் இனியா என்ற மாணவி 10 நிமிடங்களில், ஆங்கிலத்தில் உள்ள 50 குழந்தைகளுக்கான பாடல்களை (Rhymes) பாடி, இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ்சில், (India Book of Records) இடம் பிடித்துள்ளார்.

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ், சாலினி தம்பதியினரின் ஐந்து வயது மகள் இனியா. இவர், மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில் யூ.கே.ஜி பயின்று வருகிறார். இந்நிலையில், 10 நிமிடங்களில் ஆங்கிலத்தில் உள்ள 50 குழந்தைகளுக்கான பாடல்களை பாடி, இனியா அசத்தியுள்ளார்.



இவரது ஞாபகத் திறனை அங்கீகரிக்கும் விதமாக, இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் நிறுவனத்தினர், சிறுமியின் சாதனையை, இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் பதிவிட்டுள்ளனர்.

10 நிமிடங்களில் 50 பாடல்களை பாடி அசத்தியுள்ள மாநகராட்சி பள்ளி மாணவி இனியாவுக்கு, கோவை மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...