விலை வீழ்ச்சியால் நஷ்டம்: கோவையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தக்காளி, வெங்காயத்தை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!

தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் கொட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர்.



கோவை: சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி விலை தொடர் வீழ்ச்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தரையில் கொட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர்.



கடந்த சில மாதங்களாக தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் கிட்டத்தட்ட 25,000 ஹீட்டர் பரப்பளவில் நடவு செய்யப்பட்ட சின்ன வெங்காயம், தக்காளி அறுவடை காலங்களில் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருவதாகவும், விவசாயம் செய்த கூலி கூட கிடைக்கப் பெறாமல் இருப்பதாகவும் கூறி அரசு, தோட்டக்கலை அலுவலர்களை நியமனம் செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க செய்து அரசாங்கமே சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்ய நியாய விலை கடை மூலமாக விற்பனை செய்யவும், ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கவும், கோரிக்கை விடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் கொட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.





Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...