கோவையில் தொடர் மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு..!

கோவையில், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தொடர் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தொடர் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சோலையாறு அணை:-

சோலையாறு அணையின் மொத்த நீர்மட்டம் 165 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம், 162.18 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 5,811 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து, 5,912 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பரம்பிக்குளம் அணை:-

பரம்பிக்குளம் அணையின் மொத்த நீர்மட்டம், 72 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம், 68.38 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 5,984 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து, 5,384 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

ஆழியாறு அணை:-

ஆழியாறு அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தற்போது அணையின் நீர்மட்டம், 117.30 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 2,053 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து, 2,458 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பவானிசாகர் அணை:-

மொத்த நீர்மட்டம், 105 அடி. தற்போது இந்த அணையின் நீர்மட்டம், 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 17,338 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையிலிருந்து, 17,508 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...