கோவையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, வாலாங்குளக்கரையில் இருந்த 10 க்கும் மேற்பட்ட சோலார் மின் விளக்கு கம்பங்கள் கீழே சரிந்து விழுந்துள்ளது. அவை மழையில் நனைந்தபடி உள்ளதால், பழுதடைந்து பயனற்று போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கோவை: கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கோவை உக்கடம் வாலாங்குளம் கரைகளை பலப்படுத்தி போக்குவரத்து நெரிசல்களை தவிர்ப்பதற்காக குளத்தின் கரையில் போக்குவரத்திற்காக ஒரு வழிச்சாலை அமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளக்கரைகளில் அனைத்தும் நவீன சோலார் மின்விளக்குகள் அமைத்து பராமரிக்கப்பட்டு வந்தது.
தற்பொழுது,கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, நேற்று குளக்கரையில் அமைக்கப்பட்டிருந்த 10 க்கும் மேற்பட்ட சோலார் மின் விளக்கு கம்பங்கள் கீழே சரிந்து விழுந்துள்ளது.

கீழே விழுந்த சோலார் மின் கம்பங்கள், மழையில் நனைந்தபடி உள்ளதால், அவை பழுதடைந்து பயனற்று போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, சமந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின் கம்பங்களை சரிசெய்து அவற்றை மீண்டும் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.