போத்தனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்…!

மதமாற்ற நோக்கத்துடன் வந்தவர்களை கைது செய்யாமல், இந்து முன்னணி நிர்வாகி மீது போலீசார் பொய் வழக்கு போட்டதாக குற்றம்சாட்டி, இந்து முன்னனி அமைப்பினர் போத்தனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த ஸ்பென்டி லெபர்சன் என்ற கிறிஸ்துவ ஊழியரை, மதம் மாற்றம் செய்வதாக கூறி, அவரை தாக்கியதாக இந்து முன்னணி பிரமுகர் உத்தமன் என்பவரை போத்தனூர் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், மத மாற்ற நோக்கத்துடன் வந்தவர்களை கைது செய்யாமல், இந்து முன்னணி நிர்வாகி மீது போலீசார் பொய் வழக்கு போட்டதாக குற்றம்சாட்டி, மாநில நிர்வாக்குழு உறுப்பினர் சதீஸ் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட இந்து முன்னனி அமைப்பினர் போத்தனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



போலீசார் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து, இந்து முன்னனி நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தையில்போலீசார் ஈடுபட்ட போது, மத மாற்றம் பிரச்சாரம் செய்த மூவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மாநில தலைவர் தலைமையில் போத்தனூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகதெரிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...