நஞ்சுண்டாபுரம் அருகே இயேசு வாசகங்கள் அடங்கிய சட்டையை போட்டிருந்த கிறிஸ்தவ ஊழியர்கள் மத மாற்றம் செய்ய வந்துள்ளார்கள் என்று எண்ணி அவர்களை தாக்கிய இந்து முன்னணி நிர்வாகியை போத்தனூர் போலீசார் கைது செய்தனர்.
கோவை: தூத்துக்குடி மாவட்டம் வெள்ளைப்பட்டி, மீனவர் காலனியை சேர்ந்தவர் ஸ்பென்டி லெபர்சன் (33),கிறிஸ்தவ ஊழியக்காரராக உள்ளார். நேற்று இவர் தனது நண்பர்களான ராஜசேகர், செல்வம் ஆகிய இருவருடன், ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனது மனைவியின் மாமாவை பார்க்க கோவை வந்துள்ளார்.
நஞ்சுண்டாபுரம் பாலத்தின் அருகே வாகனத்தை நிறுத்தி முகவரி விசாரித்து கொண்டு பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, ஸ்பென்டி லெபர்சன் மற்றும் அவரது நண்பர்கள் ஏசு குறித்த வாக்கியங்கள் பிரிண்ட் செய்யப்பட்ட உடையை அணிந்திருந்ததாக தெரிகிறது.

அப்போது அங்கு வந்த இந்து முன்னணி சுங்கம் பொறுப்பாளர் உத்தமன் (31) என்பவர், ஸ்பென்டி லெபர்சன் மற்றும் அவர்களின் நண்பர்கள் மதமாற்ற வந்ததாக எண்ணி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், அவரை காலால் உதைத்து, கீழே தள்ளி தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து, அங்கு பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், தகலறிந்து வந்த போத்தனூர் போலீசார் ஸ்பென்டி லெபர்சன், ராஜசேகர், செல்வம் ஆகியோரை மீட்டு அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதையடுத்து, ஸ்பென்டி லெபர்சன் அளித்த புகார் அடிப்படையில், இந்து முன்னணி பிரமுகர் உத்தமன் மீது 341, 294(b), 323,506(i) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போத்தனூர் போலீசார் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இந்து முன்னணி நிர்வாகி உத்தமன் மீது ஏற்கனவே அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.