"கிரைண்டர்" செயலியின் மூலம் ஆண்களின் செல்போன் எண்களை சேகரித்து, அதில் தொடர்பு கொண்டு ஆசை வார்த்தை கூறி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்து, அவர்களிடம் இருக்கும் வாகனம், செல்போன், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்பிச்சென்று விடுவார்கள் என்பது விசரானையில் தெரியவந்துள்ளது.
கோவை: கோவையில் "கிரைண்டர்" என்ற ஆப் மூலம் இளைஞரின் செல்போன் எண்ணை சேகரித்து ஆசை வார்த்தை கூறி நேரில் வரவழைத்து மிரட்டி வழிப்பறி செய்த கும்பலை சேர்ந்த பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரவீன். இவர் கடந்த 27 ஆம் தேதி வேலை முடிந்து வரும் போது, அவரது செல்போனிற்கு தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில், பேசிய பெண் ஒருவர் ஆசை வார்த்தை கூறி அவரை சூலூர் நாகமநாயக்கன்பாளையம் பகுதிக்கு அழைத்துள்ளார்.
இதை நம்பிய பிரவீன் அங்கு சென்ற போது ஒரு பெண் மற்றும் அவருடன் இருந்த மற்ற 3 நபர்களும் சேர்ந்து பிரவீனை வழிமறித்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு, இருசக்கர வாகனம் ஆகிவற்றை பறித்து சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பிரவீன், சூலூர் காவல்நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த சூலூர் உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் விசாரணை நடைபெற்று வந்துள்ளது.
இந்நிலையில், வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட சூலூர் பகுதியை சேர்ந்த பெண் ரிதன்யா, ராஜேஷ் குமார், இளந்தமிழன் மற்றும் சுரேஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 2 கார்கள் மற்றும் செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து, நடைபெற்ற விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன: "கிரைண்டர்" என்ற செல்போன் செயலியின் மூலம் ஆண்களின் செல்போன் எண்களை சேகரித்து, அதில் தொடர்பு கொண்டு ஆசை வார்த்தை கூறி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்து, அவர்களிடம் இருக்கும் வாகனம், செல்போன், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்பிச்சென்று விடுவார்கள் என்பதை கைதான கும்பல் ஒப்புக் கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள், வெளியே சொன்னால் தவறாக நினைப்பார்கள் என்பதால் இதுவரை புகார் ஏதும் பதிவாகாமல் இருந்து வந்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
எனவே, இதை சாதகமாக பயன்படுத்தி, தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வந்த கும்பல் போலீசாரிடம் தற்போது சிக்கியுள்ளது. இதையடுத்து, பெண் உட்பட நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், பொதுமக்கள் இதுபோன்ற செல்போன் செயலிகள் மூலம் வரும் குறுஞ்செய்திகள் அல்லது செல்போன் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் அறிவுறுத்தியுள்ளார்.