கோவை சுண்ணாம்பு காளவாய் தடுப்பணையில் வெள்ளம் - பொதுமக்கள் செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை..!

நொய்யல் ஆற்று பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கோவை - பாலக்காடு சாலை, மற்றும் குனியமுத்தூர் பகுதியில் உள்ள சுண்ணாம்பு காளவாய் தடுப்பணையில் மழை நீர் காட்டாற்று வெள்ளம் போல் கரை புரண்டு ஓடி வருகிறது.



கோவை: தென்மேற்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக கோவை மாவட்டம் குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய் தடுப்பணையில் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் ஓடுவதால், பொதுமக்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவை மாவட்டத்தை பொறுத்தவரை நகர் பகுதிகளில் மிதமான மழையும், மலை மற்றும் மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.



இந்நிலையில், நொய்யல் ஆற்று பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவை - பாலக்காடு சாலை, மற்றும் குனியமுத்தூர் பகுதியில் உள்ள சுண்ணாம்பு காளவாய் தடுப்பணையில் மழை நீர் காட்டாற்று வெள்ளம் போல் ஆர்ப்பரித்து ஓடி வருகிறது.



நீரின் வேகம் அதிகமாக உள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக, பொதுமக்கள் யாரும் சுண்ணாம்பு காளவாய் தடுப்பணை அருகே செல்ல வேண்டாம் என்று காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...