பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண்கள் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து இரண்டாம் நாள் போட்டி முடிவில் இந்திய கப்பல் படை, ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில மின்சார வாரியம் முன்னிலை வகிக்கிறது.
கோவை: பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண்கள் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு பி.எஸ்.ஜி டெக் உள்விளையாட்டு அரங்கத்தில் இப்போட்டிகள் நடைபெறுகின்றது.

இதில், பஞ்சாப் போலீஸ் அணி - பஞ்சாப், இந்திய கப்பல் படை அணி - லோனாவாலா, ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு அணி - (சென்னை), ஸ்போர்ட்ஸ் ஹால்டல் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி - சென்னை, ஒருங்கிணைந்த ரயில்வே தொழிற்சாலை அணி (ஐசிஎஃப்) - சென்னை, கேரளா மாநில மின்சார வாரிய அணி - கேரளா, கேரளா போலீஸ் அணி - கேரளா மற்றும் பேங்க் ஆஃப் பரோடா - பெங்களூரு ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன.
இன்றைய (04.08.2022) முதல் போட்டியில் இந்திய கப்பல் படை அணியை எதிர்த்து கேரள போலீஸ் அணி விளையாடியது. இதில் இந்திய கப்பல் படை அணி 92 – 41 என்ற புள்ளி கணக்கில் வென்றது.
இரண்டாவது போட்டியில் பஞ்சாப் போலீஸ் அணியை எதிர்த்து கேரள மாநில மின்சார வாரியம் அணி விளையாடியது. இதில் கேரள மாநில மின்சார வாரியம் அணி 57 – 54 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

மூன்றாவது போட்டியில் ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு அணியை எதிர்த்து ஸ்போர்ட்ஸ் ஹால்டல் ஆஃப்; எக்ஸலன்ஸ் அணி விளையாடியது. இதில் நான்காம் சுற்று முடிவில் இரு அணிகளும் 87 – 87 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் இருந்தது. இதை தொடர்ந்து 5 நிமிடங்கள் போட்டி நீடித்து வழங்கப்பட்டது. இதன் முடிவில் ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு அணி 96 – 90 என்ற புள்ளி கணக்கில் வென்றது.
நான்காவது போட்டியில் ஒருங்கிணைந்த ரயில்வே தொழிற்சாலை அணியை (ஐசிஎஃப்) எதிர்த்து பேங்க் ஆஃப் பரோடா அணி விளையாடியது. இதில் பேங்க் ஆஃப் பரோடா அணி 95 – 68 என்ற புள்ளி கணக்கில் வென்றது.
இன்று (05.08.2022) போட்டியில் விளையாடும் அணிகள் விவரம்:-
முதல் போட்டியில் ஒருங்கிணைந்த ரயில்வே தொழிற்சாலை அணியை (ஐசிஎஃப்) எதிர்த்து கேரள மாநில மின்சார வாரியம் அணி விளையாடுகின்றது. இரண்டாவது போட்டியில் இந்திய கப்பல் படை அணியை எதிர்த்து ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு அணி விளையாடுகின்றது.
மூன்றாவது போட்டியில் ஸ்போர்ட்ஸ் ஹால்டல் ஆஃப்; எக்ஸலன்ஸ் அணியை எதிர்த்து கேரள போலீஸ் அணி விளையாடுகின்றது. நான்காவது போட்டியில் பஞ்சாப் போலீஸ் அணியை எதிர்த்து பேங்க் ஆஃப் பரோடா அணி விளையாடுகிறது.