திருப்பூரில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், குண்டும், குழியுமாக இருந்த சாலைகளை சீரமைக்க உத்தரவிட்டார்.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகள் சரிவர மூடப்படாமல் இருந்ததின் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி மேயரிடம் பொதுமக்கள் சார்பில் புகார்கள் சென்றதாக தெரிகிறது.

அதன்பேரில் இன்று திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதிகளில் நடைபெற்று வருகிற ஸ்மார்ட் சிட்டி பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு சம்மந்தப்பட்ட பணிகள் முடிந்தும், அப்பகுதி சாலைகள் குண்டும், குழியுமாக மூடப்படாமல் இருந்ததை கண்டு, மேயர் ஒப்பந்ததாரர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மாநகராட்சியில் நடந்து வரும் பணிகளை விரைந்து முடித்து, அதற்கான குழிகளை மூட வேண்டும் என மேயர் தினேஷ்குமார் கண்டித்தார்.
அதே போல் குழிகள் உள்ள இடங்களில் விபத்துகள் ஏற்படாத வகையில் பேரி கார்டு அமைக்க வலியுறுத்தினார். இந்த ஆய்வில் மாநகராட்சி அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனா்.