கோவை காளப்பட்டி பகுதியில் சிவன் கோவில் இடிப்பு: பொதுமக்கள் மற்றும் இந்து இயக்கங்கள் எதிர்ப்பு..!

எதிர்ப்பை மீறி கோவிலின் சுவர் இடிக்கப்பட்டதால், அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பை சேர்ந்த பலரும் ஓம் நமச்சிவாய என்ற முழக்கங்களை எழுப்பி கண்ணீர் விட்டனர். மேலும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.



கோவை: கோவை மாவட்டத்தில் தற்போது பல்வேறு இடங்களில் சாலை பராமரிப்பு பணிகள் சாலை விரிவாக்க பணிகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை காளப்பட்டி பகுதியில் பழமை வாய்ந்த சுயம்புவாய் காட்சியளிக்கும்சிவன் கோவிலை சாலை விரிவாக்க பணிகளுக்காக மாநகராட்சி நிர்வாகம் இன்று இடித்தது. இடிப்பதற்கு முன்னதாகவே அங்கு வந்த ஜேசிபி வாகனத்தை பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சிலர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இந்நிலையில், பொதுமக்களின் எதிர்ப்பை மீறியும் கோவிலின் சுவர் இடிக்கப்பட்டது. இதனால், அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பு சேர்ந்த பலரும் ஓம் நமச்சிவாய என்ற முழக்கங்களை எழுப்பி கண்ணீர் விட்டனர். மேலும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.







Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...