பகுதி நேர பி.இ. படிப்பு விண்ணப்பிக்க இன்றுடன் முடிந்தது..!

பகுதி நேர பி.இ முதலாம் ஆண்டு படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 0422-2590080, 94869-77757 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.


தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் சார்பில், அதன் கட்டுப்பாட்டில் உள்ள 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் நடப்புக் கல்வியாண்டுக்கு (2022-23) பகுதி நேர பி.இ முதலாம் ஆண்டு படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்களை, சமர்ப்பிக்க இன்று (3-ம் தேதி) கடைசி நாள் ஆகும்.

பகுதி நேர பி.இ முதலாம் ஆண்டு படிப்புகளுக்கு 1,238 பேர் விண்ணப்பித்துள்ளனர். நேற்று மாலை 5 மணி நிலவரப்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 741 ஆகும்.

மேலும், இது குறித்து விவரங்களை, www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் கலந்தாய்வு இணைய வழியாக மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பித்தவர்கள், எதேனும் சந்தேகம் இருப்பின் 0422-2590080, 94869-77757 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...