கோவை மாவட்டத்தில் 74 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்த திட்டம்..!

கோவையில் 5 மண்டலங்கள் இருப்பதால், மண்டலத்துக்கு ஒன்று வீதம் என 5 இடங்களில் சமையலறைகள் கட்டப்படுகின்றன. அங்கிருந்து, அந்தந்த மண்டலத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு, உணவு சப்ளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


தமிழக அரசு அறிவித்துள்ள காலை உணவு திட்டத்தை, கோவை மாவட்டத்தில் உள்ள 74 அரசு பள்ளிகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம் மூலமாக 1,39,138 மாணவ-மாணவிகள் பயன் பெறுவர்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு திட்டம்) ஸ்ரீதர் கூறும்போது, தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த இந்த திட்டத்தின் படி கோவையில் காலை உணவு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட அளவில் ஏற்கனவே மதிய உணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவ, மாணவிகளில் சிலர் இந்த காலை உணவு திட்டத்திலும் பயன்பெறுவர்.

மாணவ, மாணவிகளுக்கு தரமான உணவு, முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் எவ்வளவு பேர் உணவு சாப்பிடுகிறார்கள், உணவின் தரம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, என்றார்.

"கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கோவையில் 5 மண்டலங்கள் இருப்பதால், மண்டலத்துக்கு ஒன்று வீதம் 5 இடங்களில் சமையலறைகள் கட்டப்படுகின்றன. அங்கிருந்த, அந்தந்த மண்டலத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு, உணவு சப்ளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 9 பள்ளிகளில் படிக்கும், 1,119 மாணவ மாணவிகளுக்கு, மதுக்கரை நகராட்சியில் 3 பள்ளிகளை சேர்ந்த, 739 மாணவர்களும் காலை உணவு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். காலை உணவு தயாரிக்க, சமையலறை கட்டும் பணி தொடங்கி உள்ளதாக', மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வெரைட்டி..!

திங்கள்கிழமை - உப்புமா, ரவா, சேமியா, அரிசி, கோதுமை ரவா போன்றவற்றில் செய்த உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்; செவ்வாய்க்கிழமை - ரவா, சேமியா, சோளம், கோதுமை ரவா போன்றவற்றில் ஏதாவது ஒன்றில் காய்கறி சேர்த்து கிச்சடி;பபுதன்கிழமை - ரவா பொங்கல், வெண் பொங்கல், காய்கறி சாம்பார்; வியாழக்கிழமை - உப்புமா மற்றும் வெள்ளிக்கிழமை, எதாவது ஒரு கிச்சடியுடன் ரவா கேசரி அல்லது சேமியா கேசரி என் ஒரு இனிப்பு வழங்கப்படும்.

தினமும் காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு அளிக்கப்படும் என்றும் வாரம் இரு நாள், உள்ளூரில் கிடைக்கும் சிறு தானியத்தில் செய்த காலை உணவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் படிப்படியாக அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை சத்துணவு திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது, பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...