கோவையில் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஓட்டுநர் போக்ஸோவில் கைது…!

13 வயது பள்ளி மாணவியிடம் பழகி வந்த ஓட்டுனர், ஆசை வார்த்தை கூறி பல முறை பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், பேரூர் அனைத்து காவல் நிலைய போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.


கோவை: கோவையில் வசித்து வரும் 13 வயது சிறுமி தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவரிடம் வீட்டின் அருகே வசித்து வந்த 32 வயது லாரி ஓட்டுநர் நண்பராக பழகி வந்ததாக தெரிகிறது.

மேலும், கடந்த 2.5 ஆண்டுகளாக பழகி வந்த சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பல முறை பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதையும் மறைத்து, சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை பேசி பழகி வந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி ஒரு கட்டத்தில் நடந்ததை தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து சிறுமியின் தந்தை மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்கு பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

விசாரணைக்கு பின்னர், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த ஓட்டுநரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Newsletter

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...